ஈரோட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்; கலெக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்; கலெக்டர்

Added : மே 21, 2020
Share
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், புலம்பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை, சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் நேற்று காலை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.பின்னர், கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், புலம்பெயர்ந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை, சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், கலெக்டர் கதிரவன், எஸ்.பி., சக்தி கணேசன் ஆகியோர் நேற்று காலை ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு, பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர், கலெக்டர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில், கொரோனா தொற்று ஏற்படாமல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 2,400பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளனர். வெளிமாவட்டங்களில் இருந்து, 3,467பேர் வந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில், புலம்பெயர்ந்து வந்த வெளிமாநிலத்தவர்களை, சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக, 1,464 பேர் உத்தரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வெளிமாநிலத்தவர்கள் பணியாற்றிய நிறுவனங்களின் சார்பில், 1,600 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு செல்ல, 17 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். சிலர் தொழிற்சாலைகள் துவங்கி விட்டதால், ஈரோட்டிலேயே இருப்பதாக கூறியுள்ளனர். ஊருக்கு திரும்ப விருப்பம் தெரிவிப்பவர்களை ரயில் மூலம் அனுப்பி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X