சிறிய ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி: பேட்டியா தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறிய ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி: 'பேட்டியா' தகவல்

Added : மே 21, 2020
Share

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், ஈரோட்டில் சிறிய ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, ஈரோடு மாவட்ட அனைத்து தொழில், வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: ஈரோடு நகரில் சிறிய ஜவுளி, நகைக்கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய, கார்ப்பரேட் கடைகளுக்கு அனுமதி இல்லை. சிறிய கடைகள் காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை திறக்கலாம். ஊரடங்கு வரும், 31 வரை தொடர்வதால் மாலை, 7:00 முதல் காலை, 7:00 மணி வரை மருத்துவ தேவை தவிர, வெளியில் நடமாட வேண்டாம். கடை ஊழியர்கள், பார்சல், வங்கி பணி தவிர பிற பணிக்கு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும்போது முகக்கவசம், தலைக்கவசம் அணிய வேண்டும். 50 சதவீத ஊழியர்கள் கொண்டு கடை செயல்பட வேண்டும். பிற மாவட்ட ஊழியர்களை, தற்போது அழைத்து வர வேண்டாம். அல்லது முறையான அனுமதி பெற்று அழைத்து வரவும். கடையை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிப்பதுடன், கடையில் நான்கு, ஐந்து பேருக்கு மேல் அனுமதிக்க வேண்டாம். தடை செய்யப்பட்ட பகுதி களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை. கடையில் குளிர்சாதன வசதியை பயன்படுத்தக்கூடாது. ஊழியர்களுக்கு தினமும் நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். மாவட்ட நிர்வாக ஆய்வுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X