பொது செய்தி

தமிழ்நாடு

கொடுமுடி பி.டி.ஓ., உள்ளிட்ட இருவர் அதிரடி இடமாற்றம்

Added : மே 21, 2020
Share
Advertisement
மொடக்குறிச்சி: பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ., இருவரையும், மாவட்ட நிர்வாகம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. கொடுமுடி யூனியன் பி.டி.ஓ.,வாக சக்திவேல் 53, பணியாற்றி வந்தார். கொரோனா பணிகளில் ஈடுபட்டதால், அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த, 4 ல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பி.டி.ஓ., சக்திவேலுக்கும், துணை பி.டி.ஓ., பாஸ்கர்பாபுவிற்கும் இடையே பிரச்னை

மொடக்குறிச்சி: பி.டி.ஓ., - துணை பி.டி.ஓ., இருவரையும், மாவட்ட நிர்வாகம் அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. கொடுமுடி யூனியன் பி.டி.ஓ.,வாக சக்திவேல் 53, பணியாற்றி வந்தார். கொரோனா பணிகளில் ஈடுபட்டதால், அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த, 4 ல் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பி.டி.ஓ., சக்திவேலுக்கும், துணை பி.டி.ஓ., பாஸ்கர்பாபுவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அதில், பாஸ்கர்பாபு தன்னை கழுத்தை பிடித்து தாக்கியதாக பி.டி.ஓ., சக்திவேல், கலெக்டரிடம் புகார் அளித்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பி.டி.ஓ., சக்தி வேலை ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், துணை பி.டி.ஓ., பாஸ்கர் பாபு, சென்னிமலை யூனியனில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் இடமாற்றம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தேர்தல் வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகச்செல்வி, கொடுமுடி பி.டி.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறியதாவது: தவறு செய்த துணை பி.டி.ஓ., பாஸ்கர்பாபு மீது நடவடிக்கை இல்லை. ஆர்.டி.ஓ., விசாரணை இல்லை. போலீஸில் வழக்குப்பதிவு செய்யாமல், புகார் அளித்த பி.டி.ஓ.,வையும் சேர்த்து மாவட்ட நிர்வாகம் இடமாற்றம் செய்தது வருத்தமளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X