ஈரோடு: ஊரடங்கால் கடந்த, 54 நாட்களில், 1,350 டன் விசைத்தறி கூடங்களின் குப்பை குறைந்துள்ளது. இது குறித்து, ஈரோடு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் கூறியதாவது: ஈரோட்டில், 60 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் வீடுகள், 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள், 1,000க்கும் மேற்பட்ட வாகன பழுது நீக்கும் பட்டறைகள், 5,000க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இது மட்டுமின்றி காய்கறி சந்தை, உழவர் சந்தை என, ஈரோடு மாநகரில் தினசரி, 160 டன் அளவுக்கு குப்பை சேரிக்கப்பட்டது. அதில், 35 டன் பிளாஸ்டிக் குப்பை, 100 டன் மட்கும் குப்பை, 25 டன் அளவுக்கு விசைத்தறிக் கூடங்களின் குப்பை இருக்கும். கொரோனா ஊரடங்கால், விசைத்தறிகள் அனைத்தும் மூடப்பட்டதால், தினசரி, 25 டன் என, 54 நாட்களில், 1,350 டன் குப்பை குறைந்துள்ளது. பிளாஸ்டிக் குப்பையை, தூய்மை பணியாளர்களே எடுத்துக் கொள்கின்றனர். மட்கும் தன்மையுள்ள காய்கறி கழிவுகள், உரம் தயாரிக்க அனுப்பப்படுகிறது. சாலைகளில் குப்பை கொட்டாமல் நேரடியாக வரும் தூய்மை பணியாளர்களிடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE