குடும்பத்துடன் நடந்து சென்ற தொழிலாளர்கள்; அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குடும்பத்துடன் நடந்து சென்ற தொழிலாளர்கள்; அறிவுரை கூறி திருப்பி அனுப்பிய போலீசார்

Added : மே 21, 2020
Share
புன்செய்புளியம்பட்டி: ஒடிசா செல்வதற்காக, அனுமதி பெறாமல் புன்செய்புளியம்பட்டியில் இருந்து, குடும்பத்துடன் சத்தியமங்கலம் வழியாக, ஈரோடு ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களை, போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 12 தொழிலாளர்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடந்து

புன்செய்புளியம்பட்டி: ஒடிசா செல்வதற்காக, அனுமதி பெறாமல் புன்செய்புளியம்பட்டியில் இருந்து, குடும்பத்துடன் சத்தியமங்கலம் வழியாக, ஈரோடு ரயில் நிலையத்திற்கு நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்களை, போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில், நேற்று மதியம், 12 தொழிலாளர்கள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு நடந்து சென்று கொண்டிருந்தனர். இதை பார்த்த சத்தியமங்கலம் இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் நடராஜ், போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். விசாரணையில், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் என்பதும், புன்செய்புளியம்பட்டி, நேருநகர் அருகேயுள்ள, கார்த்திகேயா நூற்பாலையில் தங்கி வேலை செய்து வந்ததும் தெரிந்தது. தற்போது, வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்குவதாக தகவல் கிடைத்ததாகவும், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த, 12 பேர், புன்செய்புளியம்பட்டியில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் செல்வதற்காக சத்தியமங்கலம் வரை, 22 கி.மீ., தூரம் குழந்தைகளை அழைத்து நடந்தே வந்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் அவர்களிடம், சொந்த ஊர் திரும்புவதற்கு முறையாக அனுமதி விண்ணப்பித்து, ஒடிசா மாநிலத்தில் இருந்து அனுமதி பெறவேண்டும்; ரயில் நிலையம் சென்றாலும், ரயிலில் அழைத்து செல்லமாட்டார்கள் என, அறிவுரை கூறினர். பின்னர், தொழிலாளர்கள் அனைவரையும், ஒரு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று உணவு கொடுத்து மீண்டும் புன்செய்புளியம்பட்டி, தனியார் மில்லுக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X