பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோட்டில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு 1,464 பேருடன் புறப்பட்ட சிறப்பு ரயில்

Added : மே 21, 2020
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில் இருந்து, உத்தரபிரதேச மாநிலத்துக்கு, 1,464 பயணிகளுடன் சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால், பிற மாநிலத்தவர்கள் தாங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தனர். இவர்களுக்காக, ஈரோட்டில் இருந்து முதன் முறையாக சிறப்பு ரயில், உத்தரபிரதேச மாநிலம், மாவ் என்ற ஊருக்கு நேற்று இரவு, 8:40

ஈரோடு: ஈரோட்டில் இருந்து, உத்தரபிரதேச மாநிலத்துக்கு, 1,464 பயணிகளுடன் சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது. கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கு உத்தரவால், பிற மாநிலத்தவர்கள் தாங்கள் சொந்த ஊர் செல்ல வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தனர். இவர்களுக்காக, ஈரோட்டில் இருந்து முதன் முறையாக சிறப்பு ரயில், உத்தரபிரதேச மாநிலம், மாவ் என்ற ஊருக்கு நேற்று இரவு, 8:40 மணிக்கு இயக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தவர்கள் மொபைல் போன் மூலம் அழைக்கப்பட்டு, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊர் செல்வோருக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனமே, உணவு பொட்டலங்களை வழங்கியது. கேன்களில் குடிநீரை எடுத்து சென்றனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், சமூக இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டனர். பின்னர், 1,464 பயணிகளும் ஒருவர் பின் ஒருவராக வரவழைக்கப்பட்டு, 24 பெட்டிகளிலும் ஏற்றப்பட்டனர். ஈரோடு கலெக்டர் கதிரவன், எஸ்.பி, சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலையில் ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கும் பணி நடந்தது. ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், இட்டார்சி, ஜபல்பூர், மாணிக்பூர், பிரயாக், வாரணாசி வழியே உத்தர பிரதேச மாநிலம் மாவ் என்ற ஊருக்கு, 22 மாலை, 6:00 மணிக்கு சென்றடைய உள்ளது. இன்று மாலை, 6:00 மணிக்கு ஒடிசா மாநிலத்துக்கு, 1,500 பேர் சிறப்பு ரயிலில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். நாளை ஜார்க்கண்ட் மாநிலத்தவர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்குள் செல்ல, நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X