பொது செய்தி

தமிழ்நாடு

விசைத்தறிக்கான மின் கட்டண சலுகை நீட்டிக்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share
Advertisement
ஈரோடு: விசைத்தறிகளுக்கு, வழங்கப்பட்டு வரும் மின் கட்டண சலுகையை தொடர்ந்து வழங்க வேண்டும், எனக்கோரி, ஈரோடு கலெக்டர் கதிரவன் மூலம், தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மனு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலு கூறியதாவது: மின் கட்டணத்தில், பல்வேறு துறையினருக்கு

ஈரோடு: விசைத்தறிகளுக்கு, வழங்கப்பட்டு வரும் மின் கட்டண சலுகையை தொடர்ந்து வழங்க வேண்டும், எனக்கோரி, ஈரோடு கலெக்டர் கதிரவன் மூலம், தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மனு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, சித்தோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் பாலு கூறியதாவது: மின் கட்டணத்தில், பல்வேறு துறையினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை, மாநில அரசுகள் விலக்கிக் கொள்ள வேண்டும் என, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால், விவசாயத்துக்கான கட்டண சலுகை வேண்டும், என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோல, விசைத்தறிக்கும் மின் கட்டண சலுகை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, விசைத்தறியாளர்களுக்கு இரண்டு மாதத்தில் முதல், 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கியதுடன், அதற்கு மேலான மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு, 50 காசு கட்டண குறைப்பு செய்திருந்தார். இந்த மின் கட்டண சலுகைகள் தொடர வேண்டும். தேசிய அளவில், விவசாயத்துக்கு அடுத்தபடியாக விசைத்தறி தொழில் உள்ளது. எனவே, இச்சலுகைகளை தொடர மாநில அரசு, மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X