பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் மின்பளு திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

தர்மபுரி: விவசாய இணைப்புகளுக்கு தட்கல் முறையில், கூடுதல் மின்பளு பெறும், புதிய திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தர்மபுரி பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மின்வாரியத்தில் ஏற்கனவே உபயோகத்தில் உள்ள, விவசாய மின் இணைப்புகளுக்கு, தட்கல் முறையில் கூடுதல் மின் பளு பெறும் புதிய திட்டம், 2020 - 21 அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி, விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின் பளு பெற விரும்புவோர், தங்களின் விருப்ப கடிதத்தை, அந்தந்த பகுதிகளுக்கு உட்பட்ட மின் இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். அதில், தேவையான விபரங்களுடன், கூடுதல் மின் பளுவுக்காக, ஒரு முறை செலுத்தும் கட்டணத்தை, 30 நாட்களுக்குள் செலுத்த சம்மதக்கடிதம் ஆகியவற்றை மே, 18 முதல், 30க்குள் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். கூடுதல் மின் பளு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மின் பளுவுடன் சேர்த்து, 15 எச்.பி.,க்கு மிகாமல் இருக்க வேண்டும். விருப்பக்கடிதம் கள ஆய்வுக்காக, சம்பந்தப்பட்ட பிரிவு அலுவலகம் அனுப்பப்படும். உரிய ஆய்வுக்கு பின், ஒரு வார காலத்துக்குள் அறிவிப்பு கடிதம் பதிவு தபால் மூலம் அனுப்பப்படும். அதன் பின், உரிய ஆவணங்களை அந்தந்த பிரிவு அலுவலகத்தில், நேரடியாக அளித்து, கூடுதல் மின் பளு இணைப்பு பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X