பொது செய்தி

தமிழ்நாடு

ரசாயனத்தில் பழங்கள் பழுக்க வைப்பு: கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

Added : மே 21, 2020
Share
Advertisement

பாலக்கோடு: பாலக்கோட்டில், கார்பைடு கல் மூலம், பழங்கள் பழுக்க வைத்து விற்பனையில் ஈடுபவர்களை, அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை எனவும், எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய எடுக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு யூனியன் அலுவலக வளாகத்தில், தாலுகா உணவு பாதுகாப்பு அலுவலகம் செயல்படுகிறது. அங்கு பணியாற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர், வாரத்துக்கு ஒரு முறை கூட வருவதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், அதிகாரிகளை தேடி வரும் வியாபாரிகள், பூட்டி கிடக்கும் அலுவலகத்தை பார்த்துவிட்டு திரும்பி செல்லும் நிலை உள்ளது. இதனால், வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு ஆண்டுதோறும் விண்ணப்பிக்கும், உணவு தர சான்றிதழை புதுப்பிக்க முடியாமல் தவித்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். தற்போது, கோடை துவங்கிய நிலையில், இங்குள்ள பல்வேறு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை நடக்கிறது. மாம்பழம் சீசன் துவங்கிய நிலையில், பாலக்கோட்டில் இருந்து, பிற பகுதிகளுக்கு மாம்பழம், வாழை, சப்போட்டா பழங்களை, கார்பைடு கல் மூலம் பழுக்க வைப்படுகிறது குறித்து புகார்கள் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. பாலக்கோடு பகுதியில், கார்பைடு கல் மூலம் பழங்களை பழுக்க வைக்கும், தடை செய்யப்பட்ட ரசாயன பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலகத்தை திறக்கவும், அலட்சியத்துடன் செயல்படும் அதிகாரிகள் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X