ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 4 கொட்டகைகள் இடித்து அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரியை ஆக்கிரமித்து கட்டியிருந்த 4 கொட்டகைகள் இடித்து அகற்றம்

Added : மே 21, 2020
Share
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, ஜெர்தலாவ் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, நான்கு கொட்டகைளை பொதுப்பணித்துறையினர், ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 300 ஏக்கர் பரப்புள்ள ஜெர்தலாவ் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியால், 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், இடது கால்வாய் வழியாக

பாலக்கோடு: பாலக்கோடு அருகே, ஜெர்தலாவ் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த, நான்கு கொட்டகைளை பொதுப்பணித்துறையினர், ஜேசிபி மூலம் இடித்து அகற்றினர்.
பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட, 300 ஏக்கர் பரப்புள்ள ஜெர்தலாவ் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியால், 5,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர், இடது கால்வாய் வழியாக தும்பலஹள்ளி அணைக்கும், வலது கால்வாயிலிருந்து வெளியேறும் நீர், தர்மபுரி சனத்குமார் நதி வரை சென்றடைகிறது. அப்பகுதி விவசாயிகளுக்கு, பிரதான நீர் ஆதாரமாக இந்த ஏரி விளங்குகிறது. இந்நிலையில், இந்த ஏரியில் சிலர், ஆங்காங்கே கொட்டகை அமைத்து, ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இதுகுறித்து, விவசாயிகள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சாம்ராஜ், தாசில்தார் ராஜா, இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர், ஜேசிபி இயந்திரம் மூலம், ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றனர். அப்போது அவர்களுக்கும் ஆக்கிரமிப்பாளர்களுக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த, நான்கு கொட்டகைகள் அகற்றப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X