சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி கொலையில் பள்ளி மாணவன் கைது

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஓசூர்: உத்தனப்பள்ளி அருகே நடந்த விவசாயி கொலையில், 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அரசு பள்ளி பிளஸ் 2 மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ், 33. விவசாயி; இவர், கடந்த, 13 இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார், அனுமந்தபுரத்தை சேர்ந்த போடியப்பன், 27, ஹரிஸ், 20, முனிராஜ், 26, சீனிவாசன், 26, மாதேஷ், 22, ரமேஷ், 21, மாதேஷ், 20, நாகேஷ், 21, பிரபாகரன், 27, மற்றும் சிகரலப்பள்ளியை சேர்ந்த திராவிட விடுதலை கழக மாவட்ட செயலாளர் குமார், 30, மற்றும் சதீஷ், 27, தாசனபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி, 27, ஆகிய, 12 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில், இந்த கொலையில் தொடர்புடைய, பிளஸ் 2 படித்து வரும், அனுமந்தபுரத்தை சேர்ந்த, 17 வயது மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மே-202005:12:01 IST Report Abuse
Mani . V "......இந்நிலையில், இந்தகொலையில் தொடர்புடைய, பிளஸ் 2 படித்து வரும், அனுமந்தபுரத்தை சேர்ந்த, 17 வயது மாணவனை, போலீசார் நேற்று கைது செய்தனர். அவரை சேலம் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்". - சரி, சரி 18 வயது ஆனதும் அவனை விடுதலை செய்து விடுங்கள். அவன் இன்னும் கொள்ளை பேரை கொலை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X