பொது செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து திட்டத்தில் 19 ஏரிகள் தூர்வாரும் பணியை கலெக்டர் ஆய்வு

Added : மே 21, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஏரிகள் தூர்வாரும் பணிகளை, கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தில், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 2020 - 2021ம் நிதியாண்டில், 19 ஏரிகள், ஒரு கோடியே, 56 லட்சத்து, 870 ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கங்கலேரி பஞ்., ராமர் கொட்டாய் கீழ் குட்டை ஏரி, 6.31 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மலைசந்து ஏரி, 7.48

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் ஏரிகள் தூர்வாரும் பணிகளை, கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தில், கிருஷ்ணகிரி ஒன்றியத்தில், 2020 - 2021ம் நிதியாண்டில், 19 ஏரிகள், ஒரு கோடியே, 56 லட்சத்து, 870 ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி கங்கலேரி பஞ்., ராமர் கொட்டாய் கீழ் குட்டை ஏரி, 6.31 லட்சம் ரூபாய் மதிப்பிலும், மலைசந்து ஏரி, 7.48 லட்சம், இந்திரா குட்டை ஏரி, 5.86 லட்சம், ஏரி கொல்லி ஏரி, 8.70 லட்சம், அகரம் ஏரி, 4.85 லட்சம், பெல்லம்பள்ளி பஞ்., திம்மப்பன் ஏரி, 5.75 லட்சம் ரூபாயிலும் தூர்வாரப்படுகின்றன. சிக்கபூவத்தி பஞ்., லிங்கன்குட்டை ஏரி, 5.70 லட்சம், பந்தாரப்பள்ளி ஏரி, 2.30 லட்சம், செம்படமுத்தூர் பஞ்., தோனிகுட்டை, 20.38 லட்சம், கோட்டகுண்டு குட்டை, 6.12 லட்சம், மேல்மாந்தோப்பு ஏரி, 3.55 லட்சம், பச்சிகானப்பள்ளி பஞ்., பையனப்பள்ளி ஏரி, 5.75 லட்சம், மேகலசின்னம்பள்ளி பஞ்., அப்புகுட்டை ஏரி, 13.56 லட்சம் ரூபாய் செலவிலும் தூர்வாரப்படுகின்றன. மேலும், பூக்காரன் குட்டை, 8.35 லட்சம், மல்லிநாயனப்பள்ளி பஞ்., ஜம்பு ஏரி, 9.35 லட்சம், கல்லுகுறுக்கி பஞ்., முனியப்பன் குட்டை, 11.45 லட்சம், வெங்கடாபுரம் பஞ்., நொச்சி குட்டை ஏரி, 7.45 லட்சம், பெரிய கோட்டப்பள்ளி பஞ்., ஜெட்டேரி, 8.62 லட்சம், குருபு குட்டை, 5.30 லட்சம் ரூபாய் என மொத்தம், 19 ஏரிகள், ஒரு கோடியே, 56 லட்சத்து, 870 ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X