பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி பதுக்குவோர் குறித்து தகவல் தெரிவித்தால் சன்மானம்

Added : மே 21, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: ரேஷன் அரிசி பதுக்குவோர் குறித்து தகவல் தெரிவித்தால், சன்மானம் வழங்கப்படும் என, கிருஷ்ணகிரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா ஊரடங்கால் தற்போது மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, ஜூன் வரை ரேஷனில் இலவசமாக அனைத்து பொருட்களையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. அத்துடன் மத்திய அரசின், 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னயோஜனா' திட்டம் மூலம் கூடுதலாக ஒரு நபருக்கு, ஐந்து கிலோ வீதம் கார்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போல் அரிசி வழங்கப்படுகிறது. சில ரேஷன் கடைகளில், மத்திய அரசு ஒதுக்கியுள்ள இலவச அரிசி குறித்து கார்டுதாரர்களுக்கு முழுமையான தகவலை தெரிவிக்காமல் மக்களை, விற்பனையாளர்கள் சிலர் ஏமாற்றி வருகின்றனர். கார்டுதாரர்களிடம் மாநில அரசு வழங்கும் அரிசியுடன், மத்திய அரசு வழங்கும் அரிசி எனக்கூறி ஒரு கார்டிற்கு, ஐந்து கிலோ மட்டும் கொடுக்கின்றனர். இவ்வாறு, பொருட்களை குறைவாக வழங்குவது, பதுக்கல் மற்றும் கடத்தல் போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் பற்றி, தகவல் தெரிவித்தால் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியே தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வதோடு, அவர்களுக்கு தக்க சன்மானமும் வழங்கப்படும். குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், 94981 91500, எஸ்.ஐ., சிவசாமி, 94981 88702, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கிருஷ்ணகிரி அலகு, 04343- 231835 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகாரை தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X