கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் மருத்துவ மற்றும் அரசு பணியாளர்கள் வந்து செல்ல, அரசு பஸ் இயக்கப்படுவதாக, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு பணியாளர்களுக்காக அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி மருத்துவ பணியாளர்களுக்காக, ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை, 6:00 மணிக்கும், மாலை, 4:00 மணிக்கு ஊத்தங்கரையில் இருந்தும் புறப்படும். திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை, 6:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கு திருப்பத்தூரில் இருந்தும் புறப்படும். தர்மபுரியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக பர்கூர் வரை செல்லும் பஸ் காலை, 7:00 மணிக்கும், மாலை, 4:30 மணிக்கு தர்மபுரியில் இருந்தும் புறப்படும். ஓசூரிலிருந்து சூளகிரி வழியாக கிருஷ்ணகிரி செல்லும் பஸ் காலை, 6:00 மணிக்கும், மாலை, 5:00 மணிக்கு ஓசூரிலிருந்தும் புறப்படும். இதேபோல், அரூர் மற்றும் ஊத்தங்கரையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை, 7:30 மணிக்கும், மாலை, 6:30 மணிக்கும் புறப்படும். தர்மபுரியிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் இரண்டு பஸ்கள் காலை, 8:30 மணிக்கும், மாலை, 6:30 மணிக்கு தர்மபுரியில் இருந்து புறப்படும். திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் பஸ் காலை, 8:30 மணிக்கும், மாலை, 6:15 மணிக்கு திருப்பத்தூரில் இருந்தும் புறப்படும். ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வரும் இரண்டு பஸ்கள் காலை, 9:00 மணிக்கும், மாலை, 6:15 மணிக்கு ஓசூரில் இருந்தும் புறப்படும். கிருஷ்ணகிரியிலிருந்து ஓசூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை செல்லும் பஸ் காலை, 8:15 மணிக்கும், மாலை, 6:00 மணிக்கு கிருஷ்ணகிரியில் இருந்தும் புறப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE