உ.பி., செல்லும் 1,650 பேருக்கு மருத்துவ பரிசோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உ.பி., செல்லும் 1,650 பேருக்கு மருத்துவ பரிசோதனை

Added : மே 21, 2020
Share
ஓசூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, 1,650 தொழிலாளர்களுடன், ஓசூரில் இருந்து இன்று சிறப்பு ரயில் புறப்படுகிறது. அதற்காக, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.தமிழகத்தில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, குஜராத்தை சேர்ந்த, 58 பேர்,

ஓசூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, 1,650 தொழிலாளர்களுடன், ஓசூரில் இருந்து இன்று சிறப்பு ரயில் புறப்படுகிறது. அதற்காக, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்களை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, குஜராத்தை சேர்ந்த, 58 பேர், ராஜஸ்தான் தொழிலாளர்கள், 717 பேர், ஜார்கண்ட் மாநிலத்தினர், 180 பேர், ஒடிசாவை சேர்ந்த, 105 பேர், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த, 30 பேர், பீஹாரை சேர்ந்த, 50 பேர், மேகாலயா மற்றும் மிசோரத்தை சேர்ந்த, 50 பேர், மணிப்பூரை சேர்ந்த, 20 பேர் என மொத்தம், 1,240க்கும் மேற்பட்டோர், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த, 1,650க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், ஓசூர் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, இன்று காலை, 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மூலம், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்காக, ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அவர்கள் நேற்று வரவழைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு உடல் வெப்பநிலை, ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம் போன்ற பல்வேறு விதமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வரும், 25ல், நாகாலாந்துக்கு சிறப்பு ரயில் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X