பொது செய்தி

தமிழ்நாடு

கெலவரப்பள்ளி அணையில் 400 கன அடி நீர் திறப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

ஓசூர்: ஓசூர், கெலவரப்பள்ளி அணையில் இருந்து, நேற்று வினாடிக்கு, 400 கன அடிதண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கெலவரப்பள்ளி அணைக்கு கடந்த, 18ல், 122 கன அடியாக நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், நேற்று முன்தினம், அணைக்கு, 240 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை வினாடிக்கு, 400 கன அடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.67 அடிக்கு நீர்இருப்பு உள்ளதால், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இம்மாத துவக்கத்தில் இருந்தே, கெலவரப்பள்ளி அணைக்கு, போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில், பல நாட்கள் தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த ஒன்றரை மாதத்துக்கு பின், தென்பெண்ணை ஆற்றில் அதிகப்பட்சமாக, 400 கன அடி நீர் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X