பொது செய்தி

தமிழ்நாடு

போட்டித்தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி: பதிவு செய்ய அழைப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் ? வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும், தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், ஆன்லைனில் இணையதளம் வாயிலாக பயிற்சி அளிக்கப்பட உள்ளன. அதன்படி, http://tamilnaducareerservice.tn.gov.in என்கிற இணையதளத்தில் காணொளி வழி கற்றல், மின்னணு பாட மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. தேர்வர்கள் தங்கள் பெயர், பாலினம், தந்தை மற்றும் தாய் பெயர், முகவரி, ஆதார் எண் மற்றும் வேலைவாய்ப்பு பதிவு எண்ணை கொடுத்து, உள்ளே நுழைந்து போட்டித்தேர்வை தேர்வு செய்ய வேண்டும். தேர்வர் பெயர் மற்றும் கடவுச்சொல் வழங்கப்படும். நாம் எந்த தேர்வுக்கு தயாராகிறோம் என்பதை தேர்வு செய்து, அதில் வரும் பாட குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்யலாம். இப்பயிற்சி வகுப்புகள் வரும், 26 முதல் கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் துவக்கப்பட உள்ளதால், பங்கேற்க விருப்ப முள்ளவர்கள், 04343 - 236189 என்ற எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X