பொது செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடியை சேர்ந்தவருக்கு 'கொரோனா': கிருஷ்ணகிரி மருத்துவமனையில் சிகிச்சை

Added : மே 21, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: மும்பையிலிருந்து, தூத்துக்குடி சென்ற ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதியானதால், அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தை சேர்ந்தவர், 32 வயது ஆண். இவர், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கி பணியாற்றி வந்தார். ஊடங்கால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த அவர், அங்கிருந்து லாரியில் புறப்பட்டு கடந்த, 17ல் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடிக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முடிவு வருவதற்குள் அவர், கிருஷ்ணகிரிக்கு நடந்து சென்றுள்ளார். வழியில், இருசக்கர வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு, காவேரிப்பட்டணம் வரை சென்றவர், அங்கு மயங்கி விழுந்துள்ளார். அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனையில் நேற்று அவருக்கு, 'கொரோனா' தொற்று உறுதியானது. தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர், மும்பையிலிருந்து தூத்துக்குடி சென்றதால், கிருஷ்ணகிரி மாவட்ட கணக்கில் சேர்க்கப்படவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 20 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம், 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திருப்பினர். தற்போது, இரண்டு பேர் மட்டுமே, ஓசூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X