பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையிலிருந்து வந்த இருவருக்கு கொரோனா

Added : மே 21, 2020
Share
Advertisement

வேலூர்: சென்னையிலிருந்து, காரில் வந்த இருவருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சென்னையில் இருந்து, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர், வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கண்டிப்பேடுக்கு, கடந்த, 18ல் காரில் வந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், பிள்ளையார்குப்பத்தில் உள்ள சோதனைச்சாவடியில், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், ஆண் மற்றும் ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆண், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையிலும், பெண், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். காரில் வந்த, மேலும் இரண்டு பெண்கள், வேலூர் அரசு பென்லேண்ட் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X