சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை பலாத்கார முயற்சி: கூலித்தொழிலாளிக்கு வலை

Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி, திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்துக்கு நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, வேட்டவலம் பாரதிதாசன் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜ், 26, என்பவர், தன்னை கடந்த ஒரு வருடத்துக்கு முன், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அப்பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கடத்தி சென்றார். அங்கு, எனக்கு கஞ்சாவை வலுக்கட்டாயமாக கொடுத்தார். இதில், நான் மயங்கிய போது, என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பின்னர், இந்த விஷயத்தை நீ வெளியே சொன்னால் உன்னுடைய அப்பாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதற்கு பயந்து நான், யாரிடமும் இதை கூறவில்லை. ஆனால், தொடர்ந்து அவர், எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். அவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த சிறுமியை காப்பக நிர்வாகிகள் அழைத்து வந்து, காப்பகத்தில் தங்க வைத்தனர். இது குறித்து, சிறுமியின் தந்தை நேற்று, வேட்டவலம் போலீசில் புகார் செய்தார். போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
22-மே-202005:05:58 IST Report Abuse
Mani . V என்னய்யா வயித்தெரிச்சலாக இருக்கு. நாட்டில் சுதந்திரமாக ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முடிகிறதா? காமப் பிரியர்களுக்காக (மது பிரியர்கள் மாதிரி) சட்டத்தில் நிறைய மாற்றம் கொண்டு வந்து அவர்கள் பொலிகாளைகள் போல் திரிய போதிய ஏற்பாடு செய்ய வேண்டும் (போங்கய்யா நீங்களும், உங்கள் சட்டமும்).
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X