பொது செய்தி

தமிழ்நாடு

தி.மலையில் கொரோனா பாதிப்பு 165 ஆக உயர்வு

Added : மே 21, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று மேலும், 11 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில், மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை, 165ஆக உயர்ந்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில், வெளி மாநிலம், மாவட்டத்திலிருந்து வருவோரை மாவட்ட எல்லையிலேயே கண்டறிந்து, இதுவரை, 7,531 பேரை தனிமைப் படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. கடந்த, 18 வரை, 154 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்நிலையில், மும்பை தாராவி பகுதியில் வசித்து வந்த, தமிழக தொழிலாளர்கள், 32 பேர், கடந்த, 17ல், போளூர் வந்தனர். இவர்கள் அனைவரும், போளூர் அடுத்த கொரால்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில், தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டனர். இதில், 11 பேருக்கு, கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 165ஆக உயர்ந்துள்ளது. இதில், இருவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை தனி வார்டில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X