அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை ஆன்லைனில் ஒளிபரப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ பூஜை ஆன்லைனில் ஒளிபரப்பு

Added : மே 21, 2020
Share

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை, ஆன்லைன் மூலம், நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று, வைகாசி மாத தேய்பிறை பிரதோஷ பூஜை நடந்தது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபத்தின் அருகில் உள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஊரடங்கு உத்தரவால் கோவில் மூடப்பட்ட நிலையில், பக்தர்கள் யாரும் கோவிலினுள் அனுமதிக்கப்படவில்லை. இதனால், கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் மட்டும் பங்கேற்று, பிரதோஷ பூஜை செய்தனர். மேலும், பக்தர்களின் வசதிக்காக, ஆன்லைன் மூலம், பிரதோஷ பூஜை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X