சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மீண்டு வந்தவரை மீண்டும் தொற்றுமா?

Added : மே 21, 2020
Share
Advertisement
மீண்டு வந்தவரை மீண்டும் தொற்றுமா?

ஒரு முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமாகியவருக்கு, மீண்டும் அந்த வைரஸ் தொற்றுமா? தென் கொரியா மற்றும் சீன மருத்துவர்கள், அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்றே கருதுகின்றனர்.

அந்த இரு நாடுகளில், சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றி மீண்டோரில், சிலர் மறுபடியும் கொரோனா சோதனைக்கு வந்தனர். ஆனால், அவர்களை சோதித்தபோது, ஏற்கனவே நோய் எதிர்ப்பு அணுக்களால் செயல் இழந்த கொரோனா வைரஸ்களை சோதனை 'கிட்'கள், நோய் இருப்பது போல தவறாக காட்டியுள்ளன என்று தெரிய வந்தது.

“நம் வாழ்நாளில், எந்தெந்த கிருமிகள் நம்மை தொற்றினவோ, அவற்றுக்கெல்லாம், நம் உடல் எதிர்ப்பு அணுக்களை தயாரித்து வைத்துக்கொள்ளும். “அதே போலத்தான் கொரோனாவுக்கும். இதில் சிலர் விதிவிலக்காக இருக்கலாம், ஆனால், பெரும்பாலானோருக்கு மறுபடியும் தொற்று ஏற்படாது,” என்கிறார் அமெரிக்காவின் லா ஜோலா நோய்தொற்று ஆராய்ச்சி மையத்தின் மருத்துவரான ஷேன் குரோட்டி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X