உலகளவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல் உயர்வு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
WHO, COVID-19, Corona cases, world health organisation

ஜெனிவா: கொரோனா பரவல் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,06,000 ஆக பதிவாகியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு 50.9 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 20 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பணக்கார நாடுகள் ஊரடங்கிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், ஏழை நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகள் கவலையை அதிகப்படுத்தியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.


latest tamil news


இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார இயக்குனர் டெட்ரோஸ் அதானோம், இந்த் தொற்றுநோயை எதிர்கொள்ள நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு குறித்து நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். தொற்றுநோய்க்கு காரணமானவர்கள் ஆய்வுக்குட்படுத்தப்படுவார்கள். அது விரிவானதாக இருக்கும். அதற்கு யாரையும் விட உலக சுகாதார நிறுவனம் பொறுப்பு என்றார். மேலும், உலக சுகாதார நிறுவனத்தின் 2.3 பில்லியன் டாலர் பட்ஜெட் என்பது மிக மிகச் சிறியது. நீண்டகாலமாக பிற நிதி ஆதாரங்களை தேடுவதாகவும், கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaran vaidyanathan - Coimbatore,இந்தியா
21-மே-202010:45:38 IST Report Abuse
sankaran vaidyanathan காற்றின்மூலம் தொற்று நோய் பரவுகிறது என்கிறார்கள் . அணியும் ஆடையில் புழங்கும் பாத்திரங்களில் கிருமிகள் 2 அல்லது 4 நாட்கள் வரை நிலைத்து இருக்கும் என்று கூறுகிறார்கள். முக கவசம் மட்டும் அணிய சொல்லப் படுகிறது. ஆடைகளில் இருக்கும் கிருமிகள் காற்றில் பரவதா இரவில் வீட்டிற்கு வந்தபிறகு அணிந்த ஆடைகளை கழற்றி விட்டு மாற்றுடை அணிந்து தூங்க செல்கிறோம். அந்த ஆடைகளில் உள்ள கிருமிகள் காற்றில் பரவ வாய்ப்பில்லையா. சமூக விலகலை கடை பிடியுங்கள் என்கிறார்கள். காற்றில் பரவும் கிருமிகள் ஆடையில் நிலைத்திருக்கும் கிருமிகள் எப்பொழுதும் காற்றில் நிறைந்திருக்கும் பொழுது இரவில் அதுவும் தூங்கிவிடுமா. WHO நோயயை கட்டுப்படுத்த இயலாது அதனுடன் வாழ கற்றுக்கொள்ளுங்கள் HIV, தொழு நோய் இவைகளோடு வாழ்வதை போல என்கிறது . HIV ,தொழு நோய் சமூக இடைவெளி இல்லாவிட்டால் மனிதர்களை பற்றுகிறது. கொரோனா நோய் காற்றில் பரவி நிற்கிறது. அதனால் சமுக இடை வெளி பயன் தருமா இதனை கவனத்தில் கொள்ளவில்லை நோய் பரவுவதை தடுக்க மாற்றி திட்டமிடவில்லை . நோய் பரவுதல் தவிர்க்க முடியவில்லை .நாளுக்குநாள் தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தவிர்க்க முடியவில்லை . முனைந்து செயல் பட்டால் முயற்சி திருவினை ஆக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X