பிரிட்டோரியா: 'தென்னாப்பிரிக்காவில், இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது, 40 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் இறக்கக்கூடும்' என, சுகாதாரத்துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

5.7 கோடி மக்கள் வாழும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை, 18,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 339 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, தென்னாப்பிரிக்காவில் கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் புகையிலை மற்றும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை அமலுக்கு வந்தது முதல் அந்நாட்டில் கொரோனா பரவல் குறைந்து காணப்படுகிறது.

இதையடுத்து, 'அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள், வரும் ஜூன் மாதம் முதல் தளர்த்தப்படும்' என, அந்நாட்டின் அதிபர் சிறில் ராமபோசா அறிவித்துள்ளார். இந்நிலையில், அரசுக்கு ஆலோசனை வழங்கும் கல்வியாளர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள் குழு, 'தென்னாப்பிரிக்காவில், இந்த ஆண்டின் இறுதிக்குள் குறைந்தது, 40 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் இறக்கக்கூடும். 10 லட்சம் பேர் கடுமையான வைரஸ் தொற்றுக்கு உள்ளாவர். அவர்களுக்கு தேவையான மருத்துவ படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்படும். இதனால், ஊரடங்கில் தளர்வுகளைக் கொடுத்தால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும்' என, எச்சரித்துள்ளது. இதனால் அங்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE