இந்திய வைரஸ் அபாயகரமானது: நேபாள பிரதமர் சர்ச்சை

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
காத்மண்டு: சீனா, இத்தாலிய வைரசை விட, இந்திய வைரஸ் தான் அபாயகரமானது என நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.இந்தியாவிற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது.
IndianVirus, NepalPM, KP_SharmaOli, இந்தியவைரஸ், அபாயகரமானது, கொரோனா, தொற்று, நேபாளம், பிரதமர், சர்மா ஒலி

காத்மண்டு: சீனா, இத்தாலிய வைரசை விட, இந்திய வைரஸ் தான் அபாயகரமானது என நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி, சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

இந்தியாவிற்குட்பட்ட சில பகுதிகளான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றை தங்களுக்கு சொந்தம் என கூறிக்கொண்டு நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இந்த வரைபடத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் சர்மா ஒலி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நேபாளத்தில் வெளியூர்களில் இருந்து வந்தவர்களால் தான் கொரோனா பரவியுள்ளது. நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவது அரசுக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.


latest tamil news


தேசிய ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, சட்ட விரோதமாக பலர் நேபாளத்துக்குள் ஊடுருவியதால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இதற்கு உள்ளூரை சேர்ந்த பிரமுகர்கள், சில அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் பொறுப்பாவார்கள். முறையான பரிசோதனை எதுவும் மேற்கொள்ளாமல் இந்தியாவில் இருந்து சிலர் நேபாளத்திற்கு வருவதால் தான் இந்த பிரச்னை ஏற்படுகிறது. சீனா, இத்தாலிய வைரசை விட, இந்தியாவின் வழியே பரவும் வைரஸ் தான் அபாயகரமாக உள்ளது. இந்திய வைரசால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். கலாபானி, லிபுலேக், லிம்பியாதுரா பகுதியை நேபாளம் திரும்ப பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
21-மே-202012:04:30 IST Report Abuse
mindum vasantham China adimai Ivan ,ippo borali xin jin pingirkkum kaluvi ootruvaarkal
Rate this:
Cancel
siriyaar - avinashi,இந்தியா
21-மே-202012:02:44 IST Report Abuse
siriyaar Now modi has just 3 options to save his image , that is definitely not aligning with USA and get threats from China like 1. alcocol free India which make families happy even though no inward and violence can not be d by opposition. 2. Otherwise new industrial policy any worker in any new company must have 90% local people with in 30 KM surroundings birth place. This will make migrants happy cities will decentralize new investment will be moved to newocations again business pick up faster and people happiness index raise due to density of populations is reducing. 3. Otherwise emergency river linking and move massive people to that work. This will make new India . Otherwise BJP will loose all inward elections Bihar UP tamilnadu tex to Congress lead , modi has to take massive steps which helps India massive and divert people attention massive towards positive mood. Any way business can not be improved with current global condition and Indian capacities India must move in other direction ramarajya and make the world to follow us in new life other wise modi will loose his Fames sooner.
Rate this:
Cancel
21-மே-202012:01:49 IST Report Abuse
A. V. K. Saai Sundhara Murthy நீங்கள் வேண்டுமானால் சீனாவின் அடிமையாக இருங்கள். ஆனால், உங்கள் நாட்டை , உங்கள் மக்களை சீனாவுக்கு அடிமையாக்காதீர்கள். பின்னாளில் எந்த ஜன்மத்துக்கும் நீங்கள் எழுந்திருக்க முடியாது. டிரம்ப் சீனா வைரஸ் என்கிறார். நீங்கள் இந்திய வைரஸ் என்கிறீர்கள். அதென்ன இத்தாலி வைரஸ்! ஒருவேளை சோனியா, ராகுலை குறிப்பிடுகிறாரோ !!!அப்படியானால் பாகிஸ்தான் வைரஸ், uk வைரஸ், பிரான்சு வைரஸ், ஸ்பெயின் வைரஸ், us வைரஸ் என பின்னாளில் ஏதாவது சொல்ல போகிறீர்களா ! ஏன், நாங்களும் கோரானாவை நேபாள வைரஸ் என்று புதிதாக குறிப்பிடலாமா ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X