சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

ஒற்றை தடுப்பூசி போதாது?

Added : மே 21, 2020
Share
Advertisement
ஒற்றை தடுப்பூசி போதாது?

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பலவகையான கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கப்படவேண்டும் என்று சர்வதேச தொற்றுநோய் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அப்போதுதான், கோவிட்- 19ன் பரவலை வெற்றிகரமாககட்டுக்குள் கொண்டு வந்து ஒழிக்க முடியும் என, அவர்கள் கருகின்றனர்.

'சயன்ஸ்' இதழில் வெளியாகியுள்ள ஒரு கட்டுரையில், கொரோனா தடுப்பூசி குறித்த சில கருத்துக்களை சர்வதேச வல்லுனர்கள் வெளியிட்டு உள்ளனர். அதன்படி, ஒரே ஒரு வெற்றிகரமான தடுப்பூசி போதாது என்றும், கொரோனாவை பல கோணங்களில் தாக்கி அழிக்கும் விதத்தில் பல்வகை தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்று வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்ல, நலமாக உள்ளோரின் உடலில் கொரோனா வைரசை செலுத்தி, பிறகு தடுப்பூசியை போட்டு பரிசோதிக்கும், அரிதான, 'மனித சவால் பரிசோதனைகள்' நடத்தப்படும் விதத்தை ஒழுங்கு படுத்தவேண்டிய அவசியத்தையும் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தவிர, சோதனையில் பங்கேற்கும் இளையோரின் உடல் இயக்கமும், முதியோரின் உடலியக்கமும் வேறுபடும் என்பதால், அதற்கு என்ன செய்வது என்பதையும் முடிவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வல்லுனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X