சென்னை: சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1500ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் நேற்று (மே 20) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 743 பேரில், சென்னையில் மட்டும் 557 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,228 ஆகவும், பலி எண்ணிக்கை 59 ஆகவும் அதிகரித்துள்ளது. அதாவது, தமிழகத்தின் மொத்த பாதிப்பில் சென்னையில் 62.3 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர், மொத்த உயிரிழப்புகளில் சென்னையில் மட்டும் 67.8 சதவீதத்தினர் பலியாகியுள்ளனர்.
மேலும், சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 60.27 சதவீதம் ஆண்கள், 39.71 சதவீதம் பெண்களும், திருநங்கை மூன்று பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நேற்றைய மண்டலவாரியான பாதிப்பை பொறுத்தவரையில், ராயபுரத்தில் நேற்று மட்டும் 115 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால், அங்கு மொத்த பாதிப்பு 1,538 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், திரு.வி.க.நகரில் 76 பேரும், கோடம்பாக்கம் 57 பேரும், அண்ணாநகரில் 52 பேரும், தண்டையார்பேட்டையில் 50 பேரும், தேனாம்பேட்டையில் 47 பேரும், திருவொற்றியூரில் 39 பேரும், அடையாறு 33 பேரும், வளசரவாக்கத்தில் 26 பேரும், அம்பத்தூரில் 22 பேரும், மாதவரத்தில் 17 பேரும், மணலியில் 8 பேரும், பெருங்குடியில் 7 பேரும், ஆலந்தூரில் 6 பேரும், சோழிங்கநல்லூரில் 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக மொத்த பாதிப்பு
ராயபுரம் - 1538
கோடம்பாக்கம் - 1192
திரு.வி.க.நகர் - 976
தேனாம்பேட்டை - 869
தண்டையார்பேட்டை - 773
அண்ணா நகர் - 662
வளசரவாக்கம் - 570
அடையாறு - 446
அம்பத்தூர் - 352
திருவொற்றியூர் - 221
மாதவரம் - 172
சோழிங்கநல்லூர் - 109
மணலி - 108
பெருங்குடி - 103
ஆலந்தூர் - 90
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE