சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி பாலியல் பலாத்காரம்: போலீஸ்காரர் போக்சோவில் கைது

Added : மே 21, 2020
Share
Advertisement

அரூர்: மொரப்பூர் அருகே, திருமணம் செய்து கொள்வதாக கூறி, 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூரை சேர்ந்த, 16 வயது பள்ளி மாணவி, அரூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது: கோவையில் பெற்றோருடன் இருந்து, பிளஸ் 1 படித்து வருகிறேன். கடந்த, 2017 மே, 10ல், சொந்த ஊரில், விடுமுறையில் இருந்தபோது, தர்மபுரி, சேஷம்பட்டியை சேர்ந்த உறவினர் வெற்றிவேல், 27, என்பவர் கட்டாயப்படுத்தி என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். திருமணம் செய்வதாக கூறியதால், இதை பெற்றோரிடம் கூறவில்லை. வெற்றிவேலுக்கு போலீசில் பணி கிடைத்ததால், கோவை போத்தனூர் காவலர் குடியிருப்புக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். ஆறு மாதங்களுக்கு முன், சேஷம்பட்டி வந்த அவர், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரிந்தது. கடந்த மாதம், 29ல், பெற்றோருடன் சென்று அவரிடம் கேட்டபோது, என்னை 'திருமணம் செய்ய முடியாது, முடிந்ததை பார்த்துக்கொள்' என கூறினார். இதற்கு, அவரது தாய் மகேஸ்வரி, 50, அண்ணன் பத்மநாபன், 29, மாமா சுரேஷ் ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இது குறித்து, இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப்பதிந்து, போக்சோ சட்டத்தில் வெற்றிவேலை கைது செய்தார். வெற்றிவேல், பொள்ளாச்சி போக்குவரத்து பிரிவில், போலீசாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X