பொது செய்தி

தமிழ்நாடு

'கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து'

Added : மே 21, 2020
Share
Advertisement

கரூர்: 'கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உரிமம் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: பொட்டாஷ் உரம் பயிரின் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. செடிகளின் ஈரப்பதத்தை பாதுகாத்து வறட்சியை தாங்கும் சக்தியை தருகிறது. இப்படி பல வகையில் பயிர் வளர்ச்சிக்கு தேவைப்படும் பொட்டாஷ் விலையை கொரோனா பாதிப்பை கருத்தில்கொண்டு ஐ.பி.எல் நிறுவனம், 950 ரூபாயிலிருந்து, மூட்டைக்கு, 75 ரூபாய் குறைத்து, 875 ரூபாயாக நடைமுறைப்படுத்தி உள்ளது. எனவே, உர விற்பனையாளர்கள் பொட்டாஷ் உரத்தை, 875- ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X