ஓசூர்: ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிப்போருக்கு, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ரேஷன் கார்டில் விடுபட்டவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாளாக உயர்த்த வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., கட்சி சார்பில், தேன்கனிக்கோட்டை, சூளகிரி, கெலமங்கலம், பாகலூர், தளி, அஞ்செட்டி, ஓசூர் பகுதிகளில், நேற்று முன்தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் லகுமையா மற்றும், 10 பெண்கள் உட்பட மொத்தம், 163 பேர் மீது, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, தளி, ஓசூர், சூளகிரி, பாகலூர் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE