கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முன்னாள் எம்.பி., சுகவனத்தை வசைபாடும், 'வாட்ஸ் ஆப்' பதிவு வைரலாகி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரை சேர்ந்தவர் சுகவனம், 53. இவர், தி.மு.க., சார்பில் எம்.பி.,யாகவும், எம்.எல்.ஏ.,வாகவும் பதவி வகித்தவர். கடந்த, 1996ல் பர்கூர் சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வெற்றி பெற்றவர். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பாதித்த மக்களுக்கு பல்வேறு அமைப்பினர், கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். ஆனால், இதுவரை இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, எந்த உதவியும் செய்யவில்லை என, தி.மு.க.,வினரே, 'வாட்ஸ் ஆப்'பில் வறுத்து எடுத்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக, 'வாட்ஸ் ஆப்' குருப்பில் வரும் பதிவில், 'சுகவனம் அவர்களே, தி.மு.க.,-வுக்கு நீ என்ன செய்தாய். பத்து ஆண்டு காலம், எம்.பி., மற்றும் ஐந்து ஆண்டு காலம், எம்.எல்.ஏ.,வாக இருந்து, மகன் மற்றும் மகளுக்கு இலவச எம்.பி.பி.எஸ்., சீட்டு வாங்கிக் கொண்டாய். 32 ஆண்டுகளாக இளைஞரணி பதவி, மூன்றரை ஆண்டுகளாக மாவட்ட செயலாளர் பதவி என பொறுப்பில் இருந்த நீங்கள், இந்த மாவட்ட மக்களுக்கும், உங்கள் தொகுதி மக்களுக்கும், கொரோனா என்ற இந்த சோதனையான காலத்தில், என்ன செய்தாய் சொல்' என்ற பதிவு, 'வாட்ஸ் ஆப்'பில் வைரலாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE