பொது செய்தி

தமிழ்நாடு

நிவாரணம் வழங்கக் கோரி ஆட்டோ ஓட்டுனர்கள் மனு

Added : மே 21, 2020
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் விஜயமோகன், செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில், கொரோனா நிவாரணம் வேண்டி, நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: கடந்த, 25 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால்

நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் விஜயமோகன், செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில், கொரோனா நிவாரணம் வேண்டி, நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: கடந்த, 25 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் எங்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உதவித்தொகையுடன் கூடிய நிவாரணப் பொருள்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் இவ்வாறு நிவாரண தொகை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X