நாமக்கல்: நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் விஜயமோகன், செயலாளர் இளையராஜா ஆகியோர் தலைமையில், கொரோனா நிவாரணம் வேண்டி, நாமக்கல் ஆர்.டி.ஓ., கோட்டைக்குமாரிடம் மனு அளித்தனர். மனு விபரம்: கடந்த, 25 ஆண்டுகளாக, ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறோம். கடந்த, இரு மாதங்களாக, மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த ஊரடங்கு உத்தரவால் எங்களுக்கு எந்தவித வருமானமும் இல்லாமல், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, உதவித்தொகையுடன் கூடிய நிவாரணப் பொருள்கள் தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் நகர்ப்பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோ ஓட்டுனர் சங்கங்களும் இவ்வாறு நிவாரண தொகை கேட்டு மனு கொடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE