தமிழ்நாடு

கொரோனா பரிசோதனை மையம்: நாமக்கல்லில் அமைக்க அரசு அனுமதி

Added : மே 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் அமைக்க, தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல், 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில், கண்காணிப்பும், சோதனையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில், கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து வருகிறது. சென்னை, கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், ஏற்கனவே, கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவ கல்லூரி மருத்துவ மனையாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு, வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமாதிரி, சளி ஆகியவற்றை சேகரித்து, சேலம், கோவை அனுப்பி கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அதனால், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது, அதற்கு, தேசிய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது: இங்கு, கொரோனா பரிசோதனை மையம் அமைய அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது, 'பாலிமரேசு தொடர் வினை' (பி.சி.ஆர்.,) மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான இயந்திரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விரைவில், இங்கேயே பரிசோதனை முழுமையாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X