பிலிகுண்டுலு காவிரியில் 3,000 கனஅடி நீர்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிலிகுண்டுலு காவிரியில் 3,000 கனஅடி நீர்வரத்து

Added : மே 21, 2020
Share
மேட்டூர்: தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர் வரத்து, வினாடிக்கு, 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இரு நாளுக்கு முன், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில், வினாடிக்கு, 1,000 கனஅடி, கபினியில், 700 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதேநேரம், தமிழகம் - கர்நாடகா எல்லையில், கோடை மழையும் தீவிரமடைந்தது. இதனால், தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு காவிரியாற்றில்

மேட்டூர்: தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர் வரத்து, வினாடிக்கு, 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இரு நாளுக்கு முன், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில், வினாடிக்கு, 1,000 கனஅடி, கபினியில், 700 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதேநேரம், தமிழகம் - கர்நாடகா எல்லையில், கோடை மழையும் தீவிரமடைந்தது. இதனால், தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 1,000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று மதியம், 3,000 கனஅடியாக அதிகரித்தது. இதன்மூலம், நேற்று காலை, மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 1,336 கனஅடியாக இருந்த நிலையில், நீர்வரத்து இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று, அணை நீர்மட்டம், 100 அடி, நீர் இருப்பு, 64.84 டி.எம்.சி.,யாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X