ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 5,000 கன அடியாக அதிகரிப்பு

Added : மே 21, 2020
Share

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து, நேற்று காலை, 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதமாக, ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இதனால், அங்குள்ள ஏராளமான அருவிகள் நீரின்றி வறண்டு காணப்பட்டன. இந்நிலையில், கடந்த, சில நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில், மத்திய நீர் ஆணைய கணக்கீட்டின் படி, நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 850 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 5,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், நீரின்றி வறண்டு காணப்பட்ட ஒகேனக்கல் ஐவர்பானி, ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X