பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.200 கோடி கயிறு தேக்கம்: லட்சம் தொழிலாளர் தவிப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

சேலம்: வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்லும், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் தேக்கமடைந்துள்ளதால், வேலைவாய்ப்பை இழந்த, லட்சம் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க, கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம், தர்மபுரி, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் செயல்படும், கயிறு உற்பத்தி கூடங்கள், 1,120ல், 1.10 லட்சம் தொழிலாளர் பணிபுரிகின்றனர். அங்கு உற்பத்தி செய்யப்படும் கயிறு, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். 'கொரோனா' பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கால், இரு மாதமாக, வடமாநிலங்களுக்கு கயிறு அனுப்புவது தடைபட்டுள்ளது. இதனால், கயிறு கூடங்கள், குடோன்களில், கயிறுகள் தேக்கமடைந்து, 1.10 லட்சம் தொழிலாளர் வேலையிழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள், நிவாரணம் வழங்குவதோடு, தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு கயிறு விற்பனைக்கு அனுப்ப, தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சேலம், சூரமங்கலத்தை சேர்ந்த கயிறு மொத்த வியாபாரி சாகுல் கூறியதாவது: சேலம், தர்மபுரி மாவட்டங்களிலிருந்து, மாதம், 125 கோடி ரூபாய் மதிப்பில், கயிறுகள் விற்பனைக்கு அனுப்பப்படும். மஹாராஷ்டிராவுக்கு மட்டும், 60 சதவீத கயிறுகள் விற்பனைக்கு செல்லும். ஊரடங்கால், மார்ச் ஆரம்பத்திலேயே, வடமாநில மொத்த வியாபாரிகள், கயிறு, 'ஆர்டர்' கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இரு மாதத்தில் மட்டும், குறைந்தபட்சம், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள கயிறுகள் தேக்கமடைந்து, உற்பத்தி முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால், அதன் உற்பத்தி, அதைச் சார்ந்த உப தொழிலில் ஈடுபட்ட, 1.10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர், வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதால், தமிழக அரசு, நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X