சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., பெண் பிரமுகர் கொலை

Added : மே 21, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: மல்லூர் அருகே, சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த, மணி மனைவி சாந்தா, 45; அ.தி.மு.க.,வின், ஒன்றிய மகளிரணி தலைவியான இவர், பெரமனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இயக்குனராக பதவி வகித்தார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, 'ஸ்கூட்டி'யில், பனமரத்துப்பட்டிக்கு புறப்பட்டார். சோழியன் காடு பகுதியில் சென்றபோது, மர்ம நபர், சாந்தா கண்ணில், மிளகாய் பொடி தூவியுள்ளார். இதனால், சாந்தா, வாகனத்தை நிறுத்த, அவரது மார்பில், அந்த நபர் கத்தியால் குத்தினார். நிலைகுலைந்து விழுந்ததும், கல்லால் தாக்கிவிட்டு, ஸ்கூட்டியை பறித்துக்கொண்டு, மர்ம நபர் தப்பிவிட்டார். அருகிலிருந்தவர்கள், சாந்தாவை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X