சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காமராஜர் சிலைக்கு செருப்பு மாலை: 3 பேர் மீது குண்டாஸ்

Added : மே 21, 2020
Share
Advertisement

சேலம்: காமராஜர் சிலைக்கு, செருப்பு மாலை அணிவித்த, மூன்று பேர் மீது, குண்டாஸ் பாய்ந்தது. சேலம், கருப்பூர் அருகே, தேக்கம்பட்டியில், காமராஜர் சிலைக்கு, கடந்த, 7 இரவு, மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தனர். கருப்பூர் போலீசார் விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த சுகவனேஸ்வரன், 27, அரவிந்த், 22, சோமு, 26, ஆகியோர், போதையில் அணிவித்தது தெரிந்தது. அவர்களை, போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது, 2015ல், தேக்கம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பெண் உள்பட, ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரை தாக்கியதாக, இரு வழக்குகள் பதிவாகி, நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதனால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று, நேற்று, கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டதால், ஓமலூர் கிளை சிறையிலுள்ள மூவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X