பொது செய்தி

தமிழ்நாடு

தன்னார்வலர்களுக்கு பாராட்டு

Added : மே 21, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தன்னார்வலர்களை பாராட்டும் நிகழ்வில், டி.எஸ்.பி., தாசில்தார், ஆணையாளர், இன்ஸ்பெக்டர் உள்பட பலர் பங்கேற்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலாக தற்போது வரை, குமாரபாளையத்தில் உள்ள ஆதரவற்றவர்கள், யாசகர்கள், மிக ஏழ்மை நிலையில் உள்ள கூலித்தொழிலாளர்கள் என பலதரப்பட்டவர்களுக்கு மூன்று வேளையும், தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர். அனைத்து பொதுநல அமைப்புகள் மற்றும் 'விடியல் ஆரம்பம்' அமைப்பு சார்பில், தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்து, தன்னார்வலர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். தாசில்தார் தங்கம், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு, இன்ஸ்பெக்டர் தேவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X