பொது செய்தி

தமிழ்நாடு

இரண்டு மாதங்களுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்த பாலம்

Added : மே 21, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் உள்ள பழைய பாலம், நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்ததால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல்- ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிபாளையம் ஆற்றில் பழைய பாலம் மற்றும் புதிய உயர்மட்டம் பாலம் என, இரண்டு பாலங்கள் உள்ளன. இந்த இரண்டிலும் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ஊரடங்கு உத்தரவால், பழைய பாலத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டன. கடந்த ஒரு வாரத்திற்கு முன், ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டதால், டூ வீலர், கார், வேன் போன்ற வாகனங்கள் புதிய உயர்மட்ட பாலத்தில் மட்டும் சென்று வந்தன. பழைய பாலத்தில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல் மீண்டும் இந்த பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பிறகு பாலம் பயன்பாட்டிற்கு வந்ததால், வாகன ஓட்டிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X