பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பெண்கள் பள்ளியில் தூய்மை பணிகள் தீவிரம்

Added : மே 21, 2020
Share
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணிகள் நடந்தன. பள்ளிபாளையம், ஆவாரங்காடு பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவியர் படிக்கின்றனர். கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பள்ளி மூடப்பட்டிருந்தது. இதனால், வளாகத்தில் முட்புதர் வளர்ந்து குப்பை அதிகளவு இருந்தது. மேலும், மழை பெய்ததால், மண் குவியலும் இருந்தது. நேற்று, நகராட்சி சார்பில், பள்ளி வளாகத்தில் இருந்த முட்புதர் அகற்றப்பட்டு, குப்பை, மண் குவியல்களை அகற்றி தூய்மை பணிகள் நடந்தன. இந்த பணிகளை ஆணையாளர் இளவரசன் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X