பொது செய்தி

தமிழ்நாடு

ராசிபுரத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைத்ததற்கு ஆசிரியர் கழகம் வரவேற்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: 'ராசிபுரத்தில், கூடுதலாக, விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்க, பள்ளிக்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. வரும், 27 முதல், விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது. கொரோனா தொற்று பரவல் இருப்பதால், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையிலும், ராசிபுரம் நகரில், கூடுதலாக ஒரு துணை விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, பள்ளிக் கல்வி இயக்குனருக்கு, முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் மூலம், கடிதம் அளிக்கப்பட்டது. மேலும், மாநிலத் தலைவர் மணிவாசகனும், பள்ளிக்கல்வி இயக்குனர், தேர்வுத் துறை இயக்குனர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்நிலையில், ராசிபுரம் நகரில், கூடுதலாக, ஒரு விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்க பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளதாக, முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தெரிவித்துள்ளார். பள்ளிக்கல்வித்துறைக்கும், பரிந்துரைத்த, முதன்மை கல்வி அலுவலருக்கும், நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X