பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் மாதம் முட்டை உற்பத்தி குறைந்து 'நெக்' கொள்முதல் விலை உயர வாய்ப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

நாமக்கல்: ''ஜூன் மாதம், தினமும், 40 லட்சம் முட்டை உற்பத்தி குறையும் என்பதால், 'நெக்' நிர்ணயம் செய்யும் கொள்முதல் விலை, 450 காசாக உயரும்,'' என, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறினார்.
இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: முட்டை உற்பத்தி செலவு, 450 காசாக இருக்கும் நிலையில், தற்போதுதான், 355 காசு வந்துள்ளது. இன்னும் முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளது. முட்டை உற்பத்தி, இயல்பு நிலைக்கு வந்துள்ளது. அதன்படி, தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது, விலை உயர்வு காரணமாக, முட்டைக்கோழியை அதிக எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக, வரும், ஜூன் மாதம் முட்டை உற்பத்தி, தினமும், 40 லட்சம் வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதன் மூலம், 'நெக்' நிர்ணயிக்கும் கொள்முதல் விலையும், 450 காசாக அதிகரிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X