நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து ஆத்தூர் பிரதான சாலையில் அமைந்துள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து, போலீஸ் ஸ்டேஷன் வரை உள்ள பகுதி மிகவும் குறுகலாக அமைந்துள்ளது. இதில், வடிகாலும் உள்ளதால், அடிக்கடி மண் சரிவு ஏற்படும். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், வீரப்பத்திர சுவாமி கோவில் பகுதியில் இருந்து புதுப்பட்டி பிரிவு சாலை வரை வடிகாலை அகலப்படுத்தி, சிமென்டால் அமைத்துவிட்டனர். ஆனால், முக்கியமாக வளைவான பகுதியில் சாலையோர வடிகால் மண் சரிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இப்பகுதியில், இரண்டு வாகனங்கள் செல்லும்போது, மீண்டும் வடிகாலில் பள்ளம் ஏற்படுகிறது. அதை ஒட்டியே வீடுகளும் உள்ளதால், சுவர்களும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, வடிகாலை சிமென்டால் அமைத்து பலப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE