சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை| Dinamalar

சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

Added : மே 21, 2020
Share

நாமக்கல்: நாமக்கல்லில், சாலை விரிவாக்கப்பணிகளை, விரைந்து முடிக்க, கோரிக்கை எழுந்துள்ளது. நாமக்கல்-துறையூர் சாலையில் என்.கொசவம்பட்டி, ரோஜா நகர், அண்ணா நகர், பட்டறை மேடு, கங்கா நகர், கூலிப்பட்டி ஆகிய பகுதிகளில் சாலை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த, ஆறு மாதங்களுக்கும் முன் துவங்கப்பட்ட சாலை விரிவாக்கப்பணிக்காக, சாலையின் இருபுறங்களும் இருந்த புளிய மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டன. தொடர்ந்து, பணி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், ஊரடங்கால் பணியில் தொய்வு ஏற்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. அந்த சாலைப்பணிக்காக ரோஜா நகர், அண்ணா நகர், பட்டறை மேடு, கங்கா நகர் உள்ளிட்ட பகுதி சாலையின் இருபுறங்களும் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு அதன்பின் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, இரண்டு பக்கங்களும் பெரிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். லாரி பட்டறை உரிமையாளர்களும், வர்த்தக நிறுவனங்களும் தொழில் முடக்கத்தால் கடும் நிதிநெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, துறையூர் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X