தமிழ்நாடு

கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டும்: குறுவை சாகுபடி விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : மே 21, 2020
Share
Advertisement

கரூர்: குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வரும் ஜூன், 12 ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. கடைமடை வரை தண்ணீர் செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக, ஆண்டுதோறும் ஜூன், 12 ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் கடந்த, 2011 க்கு பிறகு ஜூன், 12 ல் தண்ணீர் திறக்கப்படவில்லை.

282 நாளாக...: தற்போது, அணையின் நீர்மட்டம், 100 அடியை தாண்டிய நிலையில் வரும், 12ல் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். . இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: முதல்வர் அறிவிப்புக்கு பிறகு, குறுவை சாகுபடி பணிகளை துவங்கியுள்ளோம். கடந்தாண்டு ஆகஸ்ட், 13 ல் மேட்டூர் அணை, 100 அடியை தொட்டது. தற்போது, 282 நாளாக அணையின் நீர்மட்டம், 100 அடியில் நீடிக்கிறது.

1,000 கன அடி நீர் திறப்பு: மேலும், கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் நீர்வரத்தும் கணிசமாக உயர்ந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் தண்ணீர், கடைமடை பகுதி வரை செல்லும் வகையில், பொதுப்பணி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். இதுகுறித்து, பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறியதாவது: மேட்டூர் அணையின் நீர்மட்டம் திருப்திகரமாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, காவிரியாற்றில் வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி: இதனால், காவிரியாற்றின் கரை பகுதிகளில் வறட்சி எதுவும் இல்லை. இதனால், ஜூன், 12 ல் திறக்கப்படும் தண்ணீர், கடைமடை பகுதி வரை தாராளமாக செல்லும். சில பகுதிகளில், வாய்காலில் தூர் வாருதல், சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பகுதிகளை, தீவிரமாக கண்காணித்து வருகிறோம். வரும், 15 நாட்களுக்குள் பணிகளை, விரைவாக முடிக்க உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X