இந்தியாவை சீண்டும் சீனா: அமெரிக்கா சூடு

Updated : மே 21, 2020 | Added : மே 21, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
us china, china border, india china,
இந்தியா, சீனா, அமெரிக்கா, எல்லைபிரச்னை, மோதல், கண்டனம்

புதுடில்லி : இந்தியாவுடன் எல்லை பிரச்னையில் ஈடுபட்டுள்ள சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி அலிஸ் ரைஸ் கூறியதாவது: எல்லை பிரச்னையில் சீனாவின் அத்துமீறல் என்பது வெறும் வார்த்தைகளோடு மட்டும் நின்றுவிடுவதில்லை என்பதை காட்டுகிறது. தென்சீன கடல் பிரச்னை அல்லது இந்தியாவுடனான எல்லை பிரச்னையாக இருந்தாலும் சரி, இடையூறு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் ஆத்திரமூட்டும் சீனாவின் செயல்களை நாங்கள் பார்க்கிறோம். இது சீனா, தனது அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


latest tamil news
அனைவருக்கும் நன்மை பயக்கும் சர்வதேச அமைப்பை நாங்கள் பார்க்க விரும்புகிறோம். எல்லை பிரச்னைகள் என்பதை சீனா முன்வைக்கும் அச்சுறுத்தல்களை நினைவூட்டுவதாக நான் கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சிக்கிம் அருகே, இந்திய சீன ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். உயரதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின்னர், இது முடிவுக்கு வந்தது.இதன் பின்னர், லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள, பன்காங் சோ ஏரி பகுதியில், இந்திய - - சீன எல்லைப் பகுதி உள்ளது. இங்கு, கடந்த, 5 மற்றும் 6ல், இருநாட்டு படையினர் மத்தியில் பதற்றம் நிலவியது. இந்திய எல்லைப்பகுதிக்கு மிக அருகே, சீன ராணுவ ஹெலிகாப்டர்கள், வட்டமிட்டன.

பதிலுக்கு, இந்திய ராணுவத்தின், 'சுகோய் - 30' ரக போர் விமானங்கள், சீன எல்லைப்பகுதியில் சுற்றி வந்தன. இதனால், இரு நாட்டு வீரர்கள் இடையே, சண்டை மூளும் அபாயம் உருவானது. ஆனால், எல்லையில் ரோந்து பணி மட்டும் தான் நடக்கிறது என சீனா விளக்கம் அளித்தது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponssasi - chennai,இந்தியா
22-மே-202011:39:50 IST Report Abuse
ponssasi சர்வதேச பொருளாதார விதிகளை தூக்கி குப்பையில் போடுங்கள். ஒவ்வொரு நாட்டிலும் எந்த பொருளை எந்த நாட்டில் இருந்து வாங்கவேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுதான் முடிவு செய்யவேண்டும். சீனா தன் நாட்டில் உள்ள குப்பைகளை உலகெங்கும் கொட்டி பொருளாதாரம் கொழிக்கிறான். சீனா பொருட்களை இந்தியாவும், அமெரிக்காவும் தடைசெய்தால் போதும் அதற்கு உலக பொருளாதார விதிகள் இடம் கொடுக்காது World Trade Organization (WTO) ஒப்பந்தம் ஒழிக்கப்படவேண்டும். இந்தியா நெடுநாட்களாக ஒப்பந்தம் சரியில்லை என்று கையேழுத்திடாமல் காலத்தாழ்த்தியது. பின் உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று சில திருத்தங்களை செய்து கையேழுதிடத்து. எல்லா ஒப்பந்தங்களையும், பரிசீலனை செய்து ஒவொவ்ரு நாடும் சுய தேவை அறிந்து சுயசார்புடன் வாழ ஒப்பந்தம் செய்திடவேண்டும். அதுவே சீரான வளச்சிக்கு உதவும் வல்லரசுகள் பொருட்களை ஒருநாட்டின்மீது திணிக்கமுடியாது, அந்த சூழலின் சீனா அடங்கும்.
Rate this:
Cancel
Janarthanan (குடும்ப ஆட்சிக்கு முடிவுரை எழுத வேண்டும்) இதுல என்ன கொடுமை என்றால் நேபாலின் இந்த அறிவிப்பை கேட்டு நம்ம உள் நாட்டு எதிரிகள் ஒரே சந்தோஷத்தில் ஊனை இட்டு கொண்டு இருந்தார்கள்?இதுகளை எல்லாம் எந்த category சேர்ப்பது?
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
21-மே-202014:53:31 IST Report Abuse
Nallavan Nallavan அந்தம்மா மேம்போக்கா, பட்டும் படாமே பேசியிருக்கு ....... சீனா மீதான விமர்சனம் கூட இல்லை ....... இங்கிலிபீசுல என்ன சொன்னிச்சு -ன்னு நான் படிக்கலை .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X