பொது செய்தி

தமிழ்நாடு

கோடை உழவு மேற்கொள்ள வேண்டும்: வேளாண் இணை இயக்குனர் அறிவுரை

Added : மே 21, 2020
Share
Advertisement

கரூர்: 'மழைநீரை சேமிக்க மற்றும் பூச்சி நோய்களை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. கோடைப்பருவத்தில் வெப்ப மண்டல பகுதியான நிலங்களின் மேல்மட்ட மண் அதிக வெப்பமடைகிறது. இந்த வெப்பமானது கீழ்ப்பகுதிக்கு செல்லும்போது நிலத்தடி நீர் ஆவியாகி வெளியேறிவிடும். எனவே, கோடைக்காலத்தில் பெய்யும் மழைநீரானது, பூமிக்குள் செல்ல வழிவகுத்து அந்த நீரை, நிலத்தில் சேமிக்க கோடை உழவு அவசியமாகிறது. கோடை உழவு செய்யும்போது உண்டாகும் அதிக காற்றோட்டத்தினால், மண்ணிலுள்ள பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி மருந்துகளின் எஞ்சிய நஞ்சுகள், களைகள், முன்புள்ள பயிர்களின் வேர்களிலிருந்து வெளிப்படும் ரசாயனங்கள் சிதைக்கப்படுகின்றன. மேலும், காற்று மண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மழைநீரோடு கலந்து மண்ணிற்குள் செல்வதால், மண்ணின் அங்ககச்சத்து அதிகரிக்கிறது. கோடை உழவு செய்யாத கெட்டியான நிலத்தில் விழும் மழை நீரானது, மண் அரிப்பை ஏற்படுத்தி வேகமாக நிலத்தில் உருண்டோடிவிடுகின்றன. அறுவடை செய்யப்பட்டுள்ள வயல்களிலுள்ள அடித்தாள்கள், வேர்கள் முதலியன, கோடை உழவின்போது மடக்கி உழப்படுவதால் மண்ணின் அங்ககச்சத்து அதிகரிக்கிறது. இதனால், மண்ணில் காணப்படும் நன்மை செய்யும் உயிரினங்களில், செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. பெரும்பாலும் மானாவாரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மேலும், நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பல முறை புழுதிபட உழ வேண்டும். இப்படி உழுவதால் மழை நீர் மண்ணுக்கு அடியில், 10 செ.மீ முதல், 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால், நீர் ஆவியாவதை தடுப்பதோடு, வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான அளவு நீர் கிடைக்க ஏதுவாகிறது. எனவே, கோடையில் பெய்யும் மழைநீரை கொண்டு, உழவு செய்து நிலத்தை பண்படுத்துவதுடன், பயிர்களுக்கு அதிக சேதாரத்தை ஏற்படுத்தும் நோய்காரணிகள் மற்றும் புழுக்களையும் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X